இலங்கை

நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. 

தேசிய பொருளாதார சபை நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

எட்டாவது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அவர்களினால் கடந்த வருடம் அமைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா, மங்கள சமரவீர, ஜோன் செனவிரத்ன, சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்கிரம, பைஸர் முஸ்தபா, நவின் திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லிலத் பி சமரகோன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபேசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ருவன் சந்திர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.” என்று வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார். 

தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

தமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையில் யங்கூனில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடிய பொது மக்கள் கலைந்து செல்ல போலிசார் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்துள்ளனர்.

நைஜீரியாவின் நைகர் மாகாணத்தில் இருந்து கடந்த வாரம் கடத்தப் பட்ட பள்ளி மாணவர்களில் 27 பருவ வயது மாணவர்களை சனிக்கிழமை நைஜீரியப் படையினர் மீட்டுள்ளனர்.