இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து அறுக்கப்போவதாக கொலை அச்சுறுத்தல் இலங்கை இராணுவ அதிகாரி இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றார். 

இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று அல்லது நாளை நாடு திரும்புவார் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்தார். இந்நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை நாட்டுக்கு அழைத்து விளக்கம் கேட்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.