இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து அறுக்கப்போவதாக கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி இன்று வியாழக்கிழமை பிற்பகல் நாடு திரும்பினார். 

பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவே நாடு திரும்பியவராவார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை எச்சரிக்கும் வகையில் கழுத்து அறுக்கப்போவதாக செய்கை மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என்று பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவையடுத்து அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.