இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்தத் திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறும். 

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இம்முறை இந்தியாவிலிருந்து 2103 பக்தர்களும், இலங்கையிலிருந்து சுமார் 8ஆயிரம் பேரும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

திருவிழா ஏற்பாடுகள் குறித்து யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் தெரிவித்துள்ளதாவது, “ஒவ்வொருவருடமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த வருடத்திலிருந்து சனிக்கிழமைகளில் புனித அந்தோனியாரின் திருவிழா கொண்டாடப்படவிருக்கின்றது. தவக்காலத்திலே வருகின்ற ஞாயிறு தினங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதற்காக இந்தவருடத்திலிருந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.