இலங்கை

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம், 15 இலட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்து, அவர்களது படகுகளும் கைப்பற்றப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த மாதம் சமர்ப்பித்த பிரேரணைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டமூல சரத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும், பாரிய அபராதத் தொகையும் விதிக்கப்படும். இதன் அடிப்படையில், 15 இலட்சம் ரூபா முதல் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.