இலங்கை

“காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழுள்ள வழக்குகளை தீர்த்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதில், இலங்கையில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசைன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

அத்தோடு, இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கிய பங்கை ஆற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37வது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தொடர் தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.