இலங்கை
Typography

அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்போவதாக கூறப்பட்டாலும், அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வேறு சீட்டுக் கட்டு இன்மையால், அதே சீட்டுக் கட்டை குலுக்கி, குலுக்கி அங்கொன்றும், இங்கொன்றுமாய் மாற்றியுள்ளனர். அதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை கெட்டபே ராஜோபவனாராம விஹாராதிபதி செப்பெட்டியா கொட சிறிவிமல தேரரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிர்வாதம் பெற்றுகொண்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டை பற்றிச் சிந்திக்கின்ற தலைவர், நாட்டில் இன்றில்லை. நாடே, பாதுகாப்பின்றி உள்ளது. தன்னுடைய பணிகளைச் செய்வதற்கு ஏனையவர்கள் ஜனாதிபதிக்கு இடமளிப்பதில்லை. சேவை செய்யக்கூடிய மனிதர்களை இல்லாமற் செய்துவிடுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர். இதனால், நாடு, இறுதி அரைவாசியில் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது.

அமைச்சரவை மாற்றத்தில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்டாலும், அதிகாரத்துடன் சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி, தன்னுடைய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவாரென நான் நினைக்கின்றேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்