இலங்கை

சட்டம், ஒழுங்கு அமைச்சராக முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு பௌத்த தேரர்களும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அப்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சு நியமனம் தொடர்பில் பேசப்பட்டது. அதன்போதே, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பௌத்த தேரர்களின் எதிர்ப்பின் காரணமாகவே இந்த அமைச்சை வழங்க முடியாதுள்ளதாக ஜனாதிபதி சரத் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளார்.