இலங்கை

அம்பாறையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த வகையிலான வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்தும் அதேவேளை, பிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையில் இத்தகைய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர் மக்களிடையே இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்க வேண்டுமென நான் வற்புறுத்த விரும்புகின்றேன்.

அம்பாறைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

கடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதனையும் அத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதக விளைவுகளையும் நாம் அனுபவித்திருக்கின்றோம். எனவே, நான் பொலிசாரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக பாகுபாடின்றி சட்டத்தினை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்தப் பிரதேசங்களிலே சமாதானமும் அமைதியும் பேணப்படுவதனை சமயத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமென நான் தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, இச்சம்பவங்களின் நிமித்தம் கடும்போக்காளர்களின் கைகள் ஓங்காமல் இருப்பதனை உறுதி செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டும் வகையில் அமைதியைக் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.” என்றுள்ளது.

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.