இலங்கை

காணாமற்போனவர்கள் பணியகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். 

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமற்போனோருக்கு நீதிகிடைப்பதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹாந்தி அன்ரெனிரீ பீறிஸ், சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மரிக் ரஹீம், சோமசிறி கே லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் மூன்று வருடத்திற்கான சேவையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பகிரங்கமான முறையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இந்த அலுவலகத்தை அமைப்பதற்காக 1.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.