இலங்கை
Typography

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று புதன்கிழமை, தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஆயினும், நான்கு சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் எனவும்  அவர்களை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் வேலாயுதம் தயாநிதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்