இலங்கை
Typography

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும், வடக்கு மாகாண சபையுடனும் இந்த விடயங்கள் தொடர்பில் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

வடக்கில் மக்களைக் மீள்குடியேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை நியமிக்க, அரசாங்கம் தவறிவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயம் தொடர்பில் பதிலளிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்