இலங்கை

தெல்தெனிய, திகன பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களை வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கைதான 24 நபர்கள் இவ்வாறாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை இச்சம்பவங்கள் தொடர்பில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு,  மீண்டும்  இன்று மாலை 6 மணி வரை  அமுல்படுத்தப்படுமெனவும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப் படுத்தவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாகவும், மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரமே பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  அவசரகாலநிலைப் பிரகடனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் என அவர் ேலும் குறிப்பிட்டார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.