இலங்கை

இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

இன்று முற்பகல் இந்தியா பயணமானார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோரின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். 121 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இக்கூட்டமைப்பில் ஆரம்ப உறுப்பு நாடாக இலங்கையும் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

மின்சக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு சூரியசக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை துரிதப்படுத்தி விரிவுபடுத்துதல், சூரியசக்தி திட்டங்களுக்கான செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொதுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கு இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்டு சில அரச தலைவர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

செய்தி மூலம் குளோபல் தமிழ் செய்திகள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.