இலங்கை
Typography

கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனுமாக யோசித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் 15.8 கோடி ரூபா பணத்தினை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.  

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு கிடைத்த 15.8 ரூபா பணம் யோசித்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ரொஹானின் வங்கிக் கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தன்னுடையதல்ல என்றும் யோசித்த ராஜபக்ஷவினுடையது எனவும் அவர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது குறித்து பொலிஸார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து குறித்த பணத்தை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

சி.எஸ்.என். அலைவரிசைக்கு முதலீடு செய்யப்பட்ட 23.4 கோடி ரூபா பணத்தில் ஒரு பகுதி போலி கணக்கு வழக்குகள் மற்றும் சட்டபூர்வமற்ற வழிவகைகளினூடாக போலி ஆவணங்கள் ஊடாக பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்