இலங்கை
Typography

கடந்த ஆட்சியில் மோசடிக்காரர்களினால் திருடப்பட்ட மக்களின் பணத்தில் 15.8 கோடி ரூபா நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டு மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

மக்களுக்காக அதிகூடிய தொகையொன்று  மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் 15.8 கோடி ரூபா பணத்தினை அரசுடமையாக்குமாறு கடுவெல நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்