இலங்கை
Typography

இலங்கை விமானப் படையின் தேவைகளுக்காக குறைந்தது 12 புதிய மிக் போர் விமானங்களை வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப் படைக்குரிய போர் விமானங்களின் ஆயுட் காலம் முடிவவைதனால், நாட்டின் போரில்லாத நிலையிலும் தேசிய மற்றும் சமுத்திர பாதுகாப்பின் தேவையை கருத்திற் கொண்டு புதிய போர் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அமைச்சரைவையிடம் முன்வைத்திருந்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS