இலங்கை

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால், துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, “எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.

சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும். மேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.

எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்க சுயாதீனமாக குழு நியமிக்கப்பட்டது. அதில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. சகல கட்சிகளையும் அழைத்து சர்வ கட்சி கூட்டமொன்றை கூட்டுமாறு நான் இந்தக் குழுவிடம் யோசனை முன்வைத்திருந்தேன். ஆனால் அறிக்கை காலதாமதமாகும் என இந்த குழு கூறியதால் சர்வ கட்சி குழு கூட்டப்படவில்லை. கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பிக்க முடியும்.

மூன்று மாகாண சபைகள் ஆளுநரின் கீழ் செயற்படுகின்றன. எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடைபெறும் வரை தொடர்ந்து அவை ஆளுநரின் கீழேயே செயற்படும். எல்லை நிர்ணயத்தில் கலப்பு மற்றும் விகிதாசார வீதங்கள் 50 ற்கு 50 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அனைத்து திருத்தங்களும் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை போன்று அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.