இலங்கை

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார். 

ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே, ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்தார்.

இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானியப் பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் விசேட கைத்தொழில் செயற்பாடுகளின் பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்க முடியும் என்றும் ஜப்பானியப் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இலங்கையின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜப்பானிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும், கழிவுப்பொருள் முகாமைத்துவ செயற்திட்டத்திற்கும் உதவி வழங்குவதாக ஜப்பானிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் கடற்படை செயற்பாடுகளிலும் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை இதன்போது நினைவுகூர்ந்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திர வலய நாடுகளிடையே ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த உதவி இலங்கைக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இது தொடர்பாக ஜப்பானிய பிரதமருக்கு விசேடமாக நன்றி தெரிவித்துள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.