இலங்கை

பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்ட தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. 

தனது அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கும் பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் செய்தியொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையில், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரப்புதல், வன்முறைகளை ஏற்படுத்தும் விடயங்களை பகிர்வது உள்ளிட்ட விடயங்களை தங்களது ஊடகத்தின் ஊடாக இடம்பெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதனையடுத்து, பேஸ்புக்கில் நுழைவதற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து, Facebook உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இனவாத, மதவாத கருத்துகளை பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தே இவ்வாறு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, சமூக வலைத்தளங்களின் தற்காலிக தடை படிப்படியாக நீக்கப்பட்டது. அதற்கமைய நேற்று புதன்கிழமை முதல் Viber செயலியும், இன்று முதல் WhatsApp செயலியும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.