இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான எந்தக் காரணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இல்லை என்று அந்தக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ முடிவு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இது அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ எதிரான பிரேரணை அல்ல. இந்த பிரேரணையின் பின்னர் புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இடமளிக்க வேண்டும். அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்த நோக்கமும் சுதந்திரக்கட்சிக்கு கிடையாது. நல்லாட்சி உருவாக்கியவர்களுக்கே அரசில் மாற்றம் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பிணை முறி தொடர்பில் கடந்த காலத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது கட்சி தான் முதலில் முறையிட்டது. ஆணைக்குழு அமைக்கவும் நாம் தான் கோரினோம். 2015 வரை காணப்பட்ட பொருளாதார நிலைமையை முறையாக முன்னேற்ற தவறிவிட்டோம். அந்த விடயமும் இந்த பிரேரணையில் உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரேரணை சுதந்திரக் கட்சி எதிர்ப்பது கஷ்டம். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மாற்றங்களை மேற்கொள்ள மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்கள். ஐ.தே.கவில் இருக்கும் பலர் கடந்த காலத்தில் தேவையான மாற்றங்களுக்கு முயன்றார்கள். அது முடியவில்லை. இந்த பிரேரணையில் அந்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை சீரமைத்தல், விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தல் ,வடக்கு மக்களின் வேதனைகளுக்கு தீர்வு காணுதல், தேசிய நல்லிணக்கத்தை பாதுகாத்தல் என்பவற்றுக்கு பரந்து பட்ட அரசாங்கமொன்று அமைக்க இந்த பிரேரணை ஊடாக வாய்ப்பு ஏற்பட வேண்டும்.

19வது திருத்தத்தின் பிரகாரம் பிரதமருக்கு எதிராக பிரேரணை கொண்டுவர முடியாது. பிணை முறி மோசடிக்கு யார் பொறுப்பு என்பதை அடிப்படையாக வைத்தே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பானவருக்கு எதிராகவே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக வாயில் திறந்துள்ளது. இதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் ஆழமாக ஆராய்ந்து வருகிறோம். ஜனாதிபதியுடனும் பேசிவருகிறோம். இந்த பிரேரணையை ஆதரிப்பதாக வெளிப்படையாக கூறுவது யாப்பிற்கு முரணானது.

அரசில் இருந்தவாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் வாக்களிப்பதாக வெளியேறி வாக்களிப்பதாக என இன்னும் முடிவு செய்யவில்லை. எமது அமைச்சர்கள் சிலரும் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த பிரேரணை வெற்றிபெற ஆளும் தரப்பிலுள்ளவர்களும் வாக்களிக்க வேண்டும்.

நிதி அமைச்சு செயற்பாடுகளை மாற்றம் செய்ய ஜனாதிபதி முயன்றார். பல கட்சிகளின் கூட்டணியாக இந்த ஆட்சி உள்ள நிலையில் அமைச்சுக்களில் தலையீடு செய்து சர்வாதிகாரிபோல செயற்பட அவர் விரும்பவில்லை. பிரேரணை தொடர்பில் 4 ஆம் திகதி காலையிலோ 3 ஆம் திகதி இரவிலோ முடிவு செய்யலாம். பாராளுமன்ற குழுவும் மத்திய குழுவும் ஒன்றாக கூடி முடிவு செய்யலாம். ” என்றுள்ளார்.

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :