இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர், நம்பிக்கையான ஆட்சியொன்றை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டு கட்சித் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்த இருக்கின்றனர். இதன் போது முக்கிய பல யோசனைகள் முன்வைக்கப்பட இருக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் தேவையான மாற்றங்களை பிரதமர் முன்னெடுக்கத் தவறினால், நாங்களுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நேரிடும்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்த்தரப்பினால் கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இதனை விட பாரிய பிணை முறி மோசடி நடந்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி தலைவர்கள் கூடி ஆராய்தார்கள். எனது அமைச்சில் இந்த சந்திப்பு நடந்தது. பிரேரணைக்கு முன்னதாக பிரதமர் பதவி விலக வேண்டும் என எந்த யோசனையும் முன்வைக்க இங்கு முடிவு செய்யப்படவில்லை. ஆனால் பல மாற்றங்களை முன்னெடுப்பது பற்றியும் திருத்தங்கள் செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.

தேசிய அரசாங்கத்தில் வேறுபட்ட கருத்துகள் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றை பேசித் தீர்வு கண்டு அரசை முன்னெடுத்து செல்கிறோம். பிரேரணையை எதிர்ப்பது கடினம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுடனும் பேசி உடன்பாடு எட்ட கால அவகாசம் இருக்கிறது.” என்றுள்ளார்.

 

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :