இலங்கை

மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு கல்வித் துறையில் நீண்டகாலப் பிரச்சினையொன்று இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மேலும் தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். யுத்தம் நிலவிய காலம் பெரும் கஷ்டங்கள், துன்பகரமான காலமாகும். அக்காலத்தில் வடக்கிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியபோது இந்த தொண்டராசிரியர்களே தமது சேவை மூலம் அதனை நிவர்த்தி செய்துள்ளனர்.

அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இவர்களை நிரந்தரமாக்குவதற்கு முறைமையொன்று இருக்கவில்லை. நாம் விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்தோம். இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் வந்ததால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்வியில் சிறந்து விளங்கியது. கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணமும் கல்வியில் முன்னணியிலிருந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டது. பாடசாலைகள் அழிவுற்று ஆசிரிகள் புலம்பெயர்ந்தமையே அதற்குக் காரணம்.” என்றுள்ளார்.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.