இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கவும், கட்சியில் மிகப் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே ஏகமனதாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுதித் தன்மையை நிலைநாட்டு, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராய்வற்காக, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதன்போது தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

கொள்கைகள் தொடர்பில் ஆராய, கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச தலைமையிலான முதலாவது குழுவினால் 38 முன்மொழிவுகளும், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் அமைக்கப்பட்ட குழுவில் 27 முன்மொழிவுகளும், பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அளவதுகொட தலைமையில், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பிலும் ஆராயும் குழுவின் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான நன்மை, தீமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதுள்ள செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரையே செயற்படும் எனவும், அதன் பின்னர் புதிய செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :