இலங்கை
Typography

தனக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமருக்க எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், இவ்விருவரும், முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட போது, சுமார் ஒரு மணித்தியாலமாக இவ்விருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது, தேசிய அரசாங்கத்தை, தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில், பிரதமரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குச் சார்ப்பாக வாக்களித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென்றும், பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்