இலங்கை

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக எந்தவித உடன்பாட்டிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திடவில்லை என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தெகிவளையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை எடுத்து வந்தது. பிரதமர் அதற்குப் பதிலளித்திருந்தார். ஆனாலும், கையெழுத்திடவில்லை.” என்றுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனையை முன்வைத்திருந்தது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.