இலங்கை

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படமாட்டார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கூட்டமைப்பில் இருந்த 5 கட்சிகளும் குறிப்பாக திரு. ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து நான் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக வர வேண்டும் என தீர்மானம் எடுத்திருந்தனர். ஆனால் என்னுடைய நிலைப்பாடு அப்போது வேறாக காணப்பட்டது. தமிழ் மக்களின் கண்ணீருக்கும் அவர்களின் பிரச்சனைக்கும் ஒரு தீர்வினை பெறக்கூடியவரை முதலைமைச்சராக நியமிக்க வேண்டும் என்பதை நான் வரவேற்றுள்ளேன்.

நாட்டில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறை ஆட்சியை எங்கள் பிரதேசத்தில் பிரயோகித்திருந்தனர். அப்போது நாங்கள் எல்லோரும் மஹிந்தவிற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடுகின்ற திட்டத்தை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது.

திரு. விக்னேஸ்வரன் அவர்களின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கின்றோம். சுமந்திரன் அவர்கள் கூறிய விடயம் உண்மை. இரண்டு வருடத்துக்கு மட்டும் முதலமைச்சராக இருப்பதாக கட்சியில் எல்லோரும் முன்னாலும் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.” என்றுள்ளார்.

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :