இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சி நடத்த இடம்கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்று தேசிய அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 

தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறியத்தந்துள்ளதாகவும், மத்திய செயற்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் வரை தாம் ஜனாதிபதியின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோமென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேசிய அரசாங்கம் எனும் பரீட்சை தோல்வியடைந்துள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை 122 வாக்குகளால் வென்ற பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதே ஜனநாயகம் என சுட்டிக்காட்டிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும், “தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சியாக செயற்பட்டு 2020இல் தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஏற்ற வகையில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோம்.” என்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலண்டனிலிருந்து நாடு திரும்பியதும் மத்திய செயற்குழுவைக் கூட்டி எமது வேண்டுகோளை பரிசீலனை செய்து எமது விருப்பத்துக்கு ஆதரவாக சரியான தீர்மானத்தைப் பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கைகயில் இருக்கிறோம்.” என்றுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேக்கர, சந்திம வீரக்கொடி, திலங்க சுமத்திபால உள்ளிட்ட குழுவினரால், அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.