இலங்கை

பொதுத் தேர்தலை நோக்கி அரசாங்கத்தினை நகர்த்திச் செல்வதே பிறந்திருக்கும் புத்தாண்டில் தமது ஒரே இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தங்காலையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி, ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய வருடம் நம்பிக்கையான நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றது. தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுத் தேர்தலொன்றை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டி ஏற்படும். அதனை செய்விப்பதே எமது ஒரே இலக்கு.” என்றுள்ளார்.