இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வவுனியா நகர சபைத் தவிசாளர் பதவியை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றிக் கொண்டது. 

வவுனியா நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக் கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்