இலங்கை

“இன ரீதியில் பிளவுபட்டிருக்கும் நாடு ஒன்று சீர்குலைந்துவிடும். இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் என்பதே இல்லை.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

“உலகில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளும், அவ்வாறான அபிவிருத்தி நிலையை அடைந்தமை நாடுகளுக்கிடையே உள்ள இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்தியே. எமது மத்தியிலுள்ள தேசிய பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக செயற்படும் பாராளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமதக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தில் இடம்பெறும் சர்வமத சர்வகட்சியின் இந்த கலந்துரையாடல் வரலாற்று பயணத்திற்கும் நாட்டின் சுபீட்சத்திற்கும் வித்திடும் ஒன்றாக அமைய வேண்டும். கடந்த மாதத்தில் அம்பாறையிலும் அதனைத்தொடர்ந்து கண்டியிலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்வத்தினால் நாட்டுக்கும் எமது பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று உலகின் மிகவும் கௌரவத்தை பெற்றிருந்த எமது நாட்டின் நற்பெயருக்கும் இதனால் பெரும் களங்கம் ஏற்பட்டது.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்படுவது முக்கியமாகும். ஒழுக்கத்தை மதிக்கும் நாட்டை உருவாக்குதல், ஒழுக்கத்தை கொண்ட வீடு நகரம் கிராமம் பிரதேசம் போன்றவற்றினால் நாடு வளர்ச்சியடையும் அவ்வாறு இல்லாத பட்டசத்தில் சீர்குலைவு ஏற்படும். உரிய நேரத்தில் உரியபணிகளை மேற்கொள்ள தவறுவோர்கள், இலங்கை மக்கள் என்ற ரீதியில் இது பின்னடைவாகும். எம்மால் உரியநேரத்தில் உரிய பணியை மேற்கொள்ளாமை ஒரு குறைபாடாகும். இந்த குறைபாட்டை நாம் விரைவாக நீக்கிகொள்ளவேண்டும். இந்த எடுத்துக்காட்டை கவனத்தில்கொள்ளாவிட்டால் பின்னடைவோம்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.