இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன மஹேந்திரனை கைது செய்வதற்காக இன்டர்போல் (சர்வதேசப் பொலிஸ்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பத்துடன், பொலிஸ் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில், அர்ஜூன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.