இலங்கை

“கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும்?” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எங்களோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார்.

இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதய சூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர்.

தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது?

சுரேஷ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார். இதற்கும் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது?” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.