ஐக்கிய தேசியக் கட்சி பௌத்த சிங்கள வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தெளிவான மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதனையே, கிராமத்திலுள்ள மக்கள் விரும்புகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த நவீன் திசாநாயக்க, ஊடகவியலாளர் மத்தியில் பேசும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவாக விளங்கும் வகையிலான மாற்றம் ஒன்று கட்சியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தான் நான் உள்ளிட்டவர்கள் இருக்கின்றோம். பௌத்த சிங்கள வாக்குகள் சிதறி உள்ளன. அந்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், 30ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் நிரப்பப்பட வேண்டும்.” என்றுள்ளார்.