தேசிய அரசாங்கத்தில் குறைபாடுகள் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக மஹிந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தில் சில மாற்றங்களை செய்துவிட்டு மக்களிடம் செல்ல வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியான எமக்கு வருத்தப்பட வேண்டி ஏற்படும்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும், அமைச்சரவைக்குள் கெட்ட நேரமாக இருந்தனர். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை.” என்றுள்ளார்.