இலங்கை
Typography

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றால் மாத்திரமே தேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கடந்த காலங்களில் இடம்பெற்றவை தொடர்பில் நீதி வழங்காமல், எவ்வளவு விடயங்களைப் பேசினாலும் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படும் ஒன்றல்ல என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்