இலங்கை
Typography

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற ஒரு கோர சம்பவத்தை அடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கம்படியான மசோதா இயற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நேற்று முன்தினம் டெல்லியில் சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் மேல், வாகனம் ஒன்று மோதியது. அவர் சாலையின் ஓரத்தில் வீசி எறியப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிர்ப் போராட்டத்தில் இருந்தார்.அப்போது விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டி உட்பட யாரும் விபத்தடைந்தவரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. மிக அருகில் இருந்த மருத்துவமனையில் காயம் அடைந்தவரை கொண்டு சேர்க்க முன்வராத நேரத்தில்,அருகில் கிடந்த செல்போனை ஒரு மனிதர் இரக்கமற்று எடுத்துச் சென்றுள்ளார். 

பல மணி நேரமாக உயிருக்குப் போராடிய அந்த மனிதர், உதவி கிடைக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த காட்சி, அங்கு சாலையில் இருந்த கண்காணிப்புக்கு கேமிராவில் பதிவாகி உள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், நேற்று, மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதுக் குறித்துப் பேசியுள்ளார்.அப்போது, சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், விபத்தடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கும்படியான சட்ட மசோதா விரைவில் இயற்றப்படும் என்று அறிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்