இலங்கை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

மாத்தறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பில் பங்கேற்று கருத்த வெளியிட்ட அவர், கூட்டு எதிரணியைச் சேர்ந்த சிலருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவத்தில் மாற்றம் தேவையெனவும், அது நகைப்புக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.