இலங்கை

தற்போதைய அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியானது, இலங்கையில் மாத்திரமல்ல முழு தெற்காசியாவிலும் நடந்த மிகப் பெரிய மோசடி. இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

பிரதமருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வரும் தேவையில்லை. தற்போதைய அரசாங்கம் மாறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.