இலங்கை

கிளிநொச்சி, இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார். 

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஷ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.

இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு சென்ற மேற்படி குழுவினர் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பி.சுரேஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள். இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.