இலங்கை
Typography

நோர்வே பிரஜைகளின் பிரதான சுற்றுலா மையமாக இலங்கையை  அடையாளப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். 

அத்தோடு, இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி  கொள்வதாகவும் நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தந்திருந்த நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, நோர்வே பிரதமர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

இலங்கையின் நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கும் நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS