இலங்கை
Typography

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம், இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.  

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறையின் சிறந்த ஆரம்பத்திற்கு காணப்பட்ட தடையைக் கடந்த விடயமாக கொள்ள முடியும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், இலங்கையில் மிகவும் அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாட்டுக்கு, இது வரலாற்று வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நியாயம், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கருத முடியும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொம் மெலினோஸ்கி கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்