இலங்கை

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் கருத்துக்களும், செயற்பாடுகளும் இன்னொரு இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள்.

போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர். பலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் ஆகி விட்டனர். எல்லா இன, மதங்களையும் சேர்ந்த மக்கள், முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறந்து விடக் கூடாது.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.