வடக்கு மாகாண சபையின் கொடியை கடந்த 18ஆம் அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகல, படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்ஜித் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.