இலங்கை

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த கால யுத்தத்தின் போது உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீள தமது சொந்த இடங்களுக்கு வருகை தரும் மக்களை மீள அவர்களின் இயல்வு வாழ்விற்கு கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், அவர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்கள் துப்பரவு செய்து குடியேறுவதற்கு வன பரிபாலன திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன பல்வேறு விததில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. எனவே, இவ்விடத்தினை விடுத்து அவர்கள் இடம்பெயரும் போது அப்பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக அப்பகுதியில் குடியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளை அரச அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.