இலங்கை

“தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒற்றுமையாக இருந்து இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யத் தவறினால், 2020இல் ஜனாதிபதியும் பிரச்சினையை எதிர்நோக்குவார், பிரதமரும் பிரச்சினைக்கு உள்ளாவார், அமைச்சர்களுக்கும் பிரச்சினை ஏற்படும். இதனால் யாருமே பயன்பெற முடியாமற் போய்விடும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

ஹட்டனில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மலையகத்தில் லயன் முறையை ஒழித்து நவீன வசதிகளுடன் கிராமங்களையும் தனி வீடுகளையும் அமைக்க வேண்டும் என்ற எனது வேலைத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றேன். இதுவரை 6000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அரசியல் தொழிற்சங்க பேதம் இன்றி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தும் என்னை விமர்சனம் செய்வதையே சிலர் பொழுது போக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். நான் அரசியலில் செய்து காட்டுவதை அவர்கள் செய்யத் தவறி விட்டார்களே என்ற பொறாமை தான் காரணம் ஆகும்.

நான் எனது அரசியல் பயணத்தில் மக்களை ஏமாற்ற மாட்டேன். அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க என்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறேன். எமது மக்களுக்கு காணி, தனி வீடு, அவற்றுக்கான உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்து உரிமை பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாரும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் சிலர் ஆட்சி அமைத்துக் கொண்டுள்ளார்கள். இந்தத் தேர்தல் முறையில் எமக்கு உடன்பாடில்லை. காரணம் வென்றவர்கள் வெளியில் நிற்கின்றார்கள். தோற்றவர்கள் உள்ளே இருகின்றார்கள். மலையக அரசியலில் புலி வருகுது, புலி வருகுது என்ற கதையாக இருக்கின்றது. இன்று அமைச்சுப் பதவி கிடைக்கும், நாளை அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது.

மலையக மக்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது. அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்ய யாரும் நினைத்தால் மக்களைக் காப்பாற்ற நான் இருக்கின்றேன். எனவே மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு விடயத்தில் இம்முறையும் ஏமாற்றப்படுவார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் நிச்சயம் மக்களை ஏமாற்றுவார்கள்.

இன்று தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகின்றது. தோட்டங்களுக்கு நல்ல இலாபமும் கிடைத்து வருகின்றது. எனவே, நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கம்பனிகளுக்கு எதிராகப் போராடி நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பேன். மேதினக் கூட்டத்தில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து தமது ஒற்றுமையை எடுத்துக் காட்டியது போல சம்பளப் போராட்டத்திலும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைய தேசிய அரசாங்கம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் இந்த இடைப்பட்ட காலப்பகுதில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு உரிய முறையில் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லா விட்டால் 2020 இல் ஜனாதிபதியும் பிரச்சினைகளை எதிர்கொள்வார். பிரதமரும் பிரச்சினைகளை சந்திப்பார். அதேநேரம் அமைச்சர்களும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் யாரும் பயன் பெற முடியாமற் போய்விடும். எனவே, இன்னும் ஒன்றரை வருடத்துக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டும்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.