‘வடக்கு மாகாண சபை மக்களுக்கும் எதையும் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை. ஆனால், உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியலைச் செய்து வருகின்றது’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டமூலம், மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.