இலங்கை
Typography

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியுடன் (மஹிந்த அணி) இணைந்து செயற்படவுள்ளதாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினர். இதன்போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS