இலங்கை
Typography

அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. 

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang இந்த நிராகரிப்பை வெளியிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு கூட்டு முயற்சி. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 30 வீத பங்குகள் உள்ளன.

இது ஒன்றும் சீனாவின் தனிப்பட்ட முதலீட்டு வலயம் அல்ல. ஏனைய நாடுகளும் முதலீடு செய்ய முடியும். நான் கூறுவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இராணுவத் தளபதிகளும் உறுதிப்படுத்துவார்கள் ” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்