இலங்கை
Typography

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர் ஏற்றிய வங்கி உதவி முகாமையாளரும், ஊழியர் ஒருவரும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய, வங்கியின் உதவி முகாமையாளரும் , ஊழியர் ஒருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இம்மாதம் 18 ஆம் திகதி, அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்ட, நிழற்படம் சமூகவலைதளத்தில் பதிவாகியிருந்ததை மேற்கோள் காட்டி, குறித்த வங்கிக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, மேற்படி வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், விசாரணையின் பின், நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியிலிருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்